விபத்தில் பரோட்டா மாஸ்டர் பலி


விபத்தில் பரோட்டா மாஸ்டர் பலி
x

அருப்புக்கோட்டை அருகே விபத்தில் பரோட்டா மாஸ்டர் பலியானார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி (வயது 48). பரோட்டா மாஸ்டர். இந்தநிலையில் வேலைக்கு செல்வதற்காக அம்மாசி மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சுக்கிலநத்தம் அருகே எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அம்மாசி சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. .இந்த விபத்தில் படுகாயமடைந்த அம்மாசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அம்மாசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Related Tags :
Next Story