லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள் - சென்னை ஐகோர்ட்டு போட்ட உத்தரவு

லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள் - சென்னை ஐகோர்ட்டு போட்ட உத்தரவு
Published on

சென்னை,

லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை, அமலாக்கத்துறையிடம் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதியும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை, ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க வேண்டுமென கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த 1964-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக கடந்த 2020-21ம் ஆண்டில் மட்டும் 553 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.

அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com