வெலிங்டனில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்


வெலிங்டனில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்
x
தினத்தந்தி 8 July 2023 12:30 AM IST (Updated: 8 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வெலிங்டனில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பெறும் வழிமுறையை எளிதாக்கும், மத்திய அரசின் ஸ்பார்ஷ் பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

டெல்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொது நிதி வழிகாட்டுதல்களின் படி, சென்னை ராணுவ பாதுகாப்பு நிதி பிரிவின் கீழ் ஸ்பார்ஷ் அவுட்ரீச் என்ற பெயரில் 2 நாட்கள் நடந்த முகாமில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராணுவ பயிற்சி கல்லூரி நிர்வாக அலுவலர் மேஜர் ஜெனரல் ராஜேந்திர ராய் பேசினார். ஸ்பார்ஷ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம், வங்கி மூலம் எளிதாக கிடைக்கும் வகையில் ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் பதிவு செய்து இணைக்கப்பட்டது. முகாமில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story