மாற்றுத்திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்


மாற்றுத்திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 July 2023 7:30 PM GMT (Updated: 10 July 2023 9:08 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

திருவாரூர்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நவீன வாசிக்கும் கருவி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நவீன வாசிக்கும் கருவி அரசால் வழங்கப்பட உள்ளது.

நவீன வாசிக்கும் கருவியில் இண்டர்நெட் ரேடியோ, பென் டிரைவ் மற்றும் மெமரி கார்டில் சேமிக்கும் வசதி, தமிழ் மற்றும் பிற மொழிகளில் படிக்க உதவும் வசதி, மொபைல் போனுடன் இணைக்கும் வசதி, டெய்சி புத்தகங்களை பதிவேற்றம் செய்தல், மின் புத்தகங்கள் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்தல், குரல் குறிப்புகள், உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

இந்த நவீன கருவியை பெறுவதற்கு தகுதியின் அடிப்படையில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அடையாள அட்டை, கல்வி சான்று ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.6, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருவாரூர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story