நெல்லையில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நெல்லையில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நெல்லையில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கத்தினர், அனைத்து கட்சி, மனித உரிமை இயக்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி, சுவாமி தோப்பு அன்புவனம், பால பிரஜாதிபதி அடிகள், நெல்லை மாவட்ட அதுல் உலமா சபை தலைவர் அப்துல் ரஹீம் பாசில் பாகவி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய கம்யூனிஸ்டு மாநில துணைப் பொதுச்செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

மணிப்பூர் சம்பவம்

மணிப்பூரில் நடைபெறும் இன அழிப்பு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டேன் சுவாமியின் வீர மரணத்திற்கு நீதி வேண்டியும், தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். சிறையில் வாடும் மனித உரிமை போராளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ.மாலை ராஜா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன். எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் கனி, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முகமது மீரான் முகைதீன், பொருளாளர் அப்துல் மஜீத், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story