காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

காஞ்சீபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 240 மனுக்களை பெற்றப்பட்டது. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் யசோதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story