திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார். அப்போது, பொதுமக்களிடமிருந்து 424 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 மாற்றுத்திறனாளி மற்றும் 19 பழங்குடியினர் என 20 பயனாளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலான தையல் எந்திரங்களையும், மஞ்சப்பைகளையும் வழங்கினார்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை கலெக்டர் இலவசமாக வழங்கினார். முன்னதாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.


Next Story