மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை கமிஷனர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். மாநகர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்து மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டு, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து காண்டு, தங்கள் கோரிக்கை குறித்து மனு கொடுத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com