பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம்: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி


பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம்: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
x

பிளஸ்-2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரம்பலூர்

கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் 8-வது இடத்தை பிடித்திருந்தது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால் இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்ட தேர்ச்சி சதவீதம் 97.95 ஆகும். இதன்படி கடந்த 2020-ம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் 2.55 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டம் முதன் முறையாக மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது ஆசிரியர்கள், மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 8-வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு பெரம்பலூர் முன்னேறியதற்கு மாணவர்களையும் அரும்பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியையும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளையும், பள்ளி ஆசிரியர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டியதோடு, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை கூறி பகிர்ந்து வருகின்றனர்.


Next Story