பெரம்பலூர்: பள்ளி மாணவர்களை மின்மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு பயன்படுத்தியதால் பரபரப்பு


பெரம்பலூர்: பள்ளி மாணவர்களை மின்மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு பயன்படுத்தியதால் பரபரப்பு
x

வேப்பந்தட்டை அருகே பள்ளி மாணவர்களை மின்மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 130 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பள்ளி மாணவ மாணவியர்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்தி இயக்கப்பட்டு வருகிறது. அந்த மின் மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டுள்ளது.

இதனை நேற்று சரி செய்வதற்காக வந்த பழுது நீக்குபவருடன் உதவிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பள்ளி நேரத்தில் மாணவர்களை வேலைக்கு பயன்படுத்தினால் எப்படி படிப்பார்கள் என பெற்றோர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story