பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளரை நேற்று இரவு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொன்றது.
பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Published on

சென்னை,

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"அஇஅதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி கழக செயலாளர், இளங்கோ அவர்கள் சமுக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்,பிரதான எதிர்கட்சியில் முக்கிய பங்காற்ற கூடிய நிர்வாகிக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை நம் மாநிலத்தில் நிலவவுது பெரும் கண்டனத்துக்குரியது.

சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு இருப்பது வெட்ககேடு,அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன்,இந்த நாசகார செயலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com