பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மருதையம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர்.
கவுன்சிலர் சாந்தி பாண்டியன் பேசும்போது, மேல்மங்கலம் காளியம்மன் கோவில் முதல் பட்டாளம்மன் முத்தையா கோவில் வரை புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டித் தர வேண்டும். மேலத்தெரு முதல் ஆற்றோரம் வரை புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். இதேபோல், கவுன்சிலர்களான ரேவதி அசோக்குமார், சரவணன், பாலசுப்பிரமணி ஆகியோரும் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். பின்னர் பேசிய தலைவர் கூறுகையில், ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.






