ஈரோடு பெரியமாரியம்மன் கோவில்திருவிழாவையொட்டி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி


ஈரோடு பெரியமாரியம்மன் கோவில்திருவிழாவையொட்டி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
x

பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

ஈரோடு

ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பெரியமாரியம்மன் கோவில்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலின் வகையறா கோவில்களாக சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வருகிற 21-ந்தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணிக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 25-ந்தேதி இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கிராமசாந்தியும், 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடக்கிறது.

கம்பம் பிடுங்கும் விழா

ஏப்ரல் மாதம் 4-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 5-ந்தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடக்கிறது.

6-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன், 7-ந்தேதி இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், இரவு 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 8-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 9-ந்தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


Next Story