விளையாட்டு மைதானத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்து மனு


விளையாட்டு மைதானத்தில்  காவலர் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்து மனு
x
தினத்தந்தி 14 July 2023 4:45 PM IST (Updated: 15 July 2023 3:56 PM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு மைதானத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

விளையாட்டு மைதானத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காரையில் உள்ள 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளையாட்டு மைதானத்தை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் உடல் திறனை மேம்படுத்த சில உடற்பயிற்சிகளும், கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து போன்றவற்றை விளையாடி வந்தனர்.

இந்த நிலையில் விளையாட்டு மைதானத்தில் காவலர்களுக்கு குடியிருப்பு அமைக்க இடம் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் குண்டா என்ற சார்லஸ் தலைமையில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேசிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளரும், ராணிப்பேட்டை நகராட்சி துணை தலைவருமான சீ.ம.ரமேஷ்கர்ணா, தமிழ், சசி, ராஜா, நரேஷ், ராஜசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story