பழங்குடியினர் வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு


பழங்குடியினர் வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
x

பழங்குடியினர் வீட்டு மனை பட்டா கேட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அடுத்த மஞ்சங்காரணை கிராமத்தில் பல ஆண்டுகளாக ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 42 குடும்பங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு வீட்டுமனைக்கான பட்டா வழங்க அதிகாரிகளிடத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாளில் புகாரை மாவட்ட கலெக்டரிடம் அளிப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் மனுக்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

1 More update

Next Story