இளம் நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும்
நாகை அருகே விவசாய நிலங்களில் இளம் நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை அருகே விவசாய நிலங்களில் இளம் நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை சாகுபடி
நாகை அருகே வடகுடி, பாலையூர், பெருங்கடம்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நேரடி விதைப்பு மூலம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இதில் 200 ஏக்கரில் வளர்ந்துள்ள இளம் நெற்பயிர்களை இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து மேய்ந்து சேதப்படுத்தி செல்கிறது.
பன்றிகள் தொல்லை
இதனால் அறுவடை நேரத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 40 மூட்டை நெல் கிடைக்கும் நிலையில், பன்றிகள் தொல்லையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாய நிலங்களில் இளம் நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.