சென்னிமலை அருகே பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலம்


சென்னிமலை அருகே பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலம்
x

சென்னிமலை அருகே பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலம்

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் ஆதிநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று புரட்டாசி விழாவை முன்னிட்டு அலமேலு மங்கை, நாச்சியார் அம்மை சமேத ஆதிநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு நாதஸ்வர தமிழிசை கச்சேரி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சீர்வரிசை பொருட்களுடன் திரளான பக்தர்கள் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் 4 ராஜ வீதிகளில் வலம் வந்து ஆதிநாராயண பெருமாள் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கு திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்படுகிறது. காலை 10 மணி அளவில் சகடை தேரில் மேள வாத்திய பஜனையுடன் உற்சவ மூர்த்திகளின் ஊர்வல நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Next Story