குறுவை சாகுபடிக்கு நாற்று நடவு பணிகள் மும்முரம்


குறுவை சாகுபடிக்கு நாற்று நடவு பணிகள் மும்முரம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை

குறுவை சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருப்பதால் மானாவாரி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதேபோல் ஆழ்குழாய் கிணறு, கிணற்று பாசனம், குளத்து பாசனம், பருவ மழை மூலம் நெற்பயிர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது குறுவை சாகுபடி தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் நாற்று நடவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை காவிரியில் கல்லணை கால்வாயில் வரும் தண்ணீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி நடைபெறும். மேலும் மற்ற இடங்களில் பாசன வசதி மூலம் குறுவை சாகுபடி நடைபெறும்.

3,500 எக்டேர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3,500 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடிக்காக நாற்று நடவு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 1,500 எக்டேர் சாகுபடிக்கு நாற்று நட வாய்ப்பு உள்ளதாக கூறினர். குறுவை சாகுபடிக்கான போதுமான உரங்கள், நாற்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வேளாண் இடுபொருட்களும் தயாராக உள்ளன. விவசாயிகளும் பருவமழையை நம்பி குறுவை சாகுபடிக்காக நாற்று நட்டு வருகின்றனர்.

1 More update

Next Story