தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
காந்தி நினைவு நாளையொட்டி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காந்தி நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் திரும்ப படித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். முன்னதாக சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story