பிளஸ்2 தேர்வில் 600க்கு 600 பெற்ற மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து


பிளஸ்2 தேர்வில் 600க்கு 600 பெற்ற மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து
x
தினத்தந்தி 11 May 2023 5:09 AM GMT (Updated: 12 May 2023 2:33 AM GMT)

மாணவி நந்தினி தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து அவர் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த எட்டாம் தேதி வெளியானது. பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான, திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். அதாவது தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து அவர் மாநில அளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.

இதனிடையே, 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன் என கூறி இருந்தார்.

அதன்படி, இன்று திண்டுக்கல்லில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர், மாணவிக்கு தங்கப்பேனாவை நேரில் பரிசளித்து வாழ்த்தினார்.


Next Story