கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!
கவிஞர் வைரமுத்துவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை,
தமிழ் திரைத்துறையில் தனது பாடல் வரிகளால் இன்றும் மிரட்சியை ஏற்படுத்தி வரும் கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முதல்-அமைச்சருடன் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே! உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!" என்று தெரிவித்துள்ளார்.