கவிதை ஒப்புவித்தல் போட்டி


கவிதை ஒப்புவித்தல் போட்டி
x

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கவிதை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் மேகநாதன் ஏற்பாட்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைஞரின் கவிதைகள் மற்றும் திரைப்பட வசனங்கள் ஒப்புவிக்கும் போட்டி அறந்தாங்கியில் நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் ரகுபதி தலைமை தாங்கினார். அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட அளவில் நடைபெற்ற கவிதை ஒப்புவித்தல் போட்டியில் அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி ஆகிய தொகுதிகளிலிருந்து பள்ளி மாணவ-மாணவிகள் 36 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் எழில்மாறன் செல்வேந்திரன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கொக்குமடை ரமேஷ், கழக இலக்கிய அணி துணை அமைப்பாளர் செந்தில்வேலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story