கனிராவுத்தர் குளத்தை தனியார் பராமரிக்க அனுமதி

கனிராவுத்தர் குளத்தை தனியார் பராமரிக்க அனுமதி
கனிராவுத்தர் குளத்தை தனியார் பராமரிக்க அனுமதி
Published on

ஈரோடு

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கனிராவுத்தர் குளம் உள்ளது. அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன்பிறகு சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, நடைபாதையும் போடப்பட்டது. இந்தநிலையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக குளம் முறையாக பராமரிக்க முடியாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் கனிராவுத்தர் குளத்தை தனியார் சொந்த செலவில் பராமரிக்க அனுமதிகேட்டு மாநகராட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் வைக்கப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் கனிராவுத்தர் குளத்தை பராமரிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com