கோட்டையூர் சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

கோட்டையூர் சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
கோட்டையூர் சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
Published on

தாயில்பட்டி, 

தாயில்பட்டி கோட்டையூர் சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஆயிரக்கணக்கான மாலை அணிந்த பக்தர்கள் கன்னியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து சக்தி மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் பச்சையாபுரம், ஆசாரிமார் தெரு, கம்பளத்தார் தெரு உள்பட முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து கோவிலில் பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பாதுகாப்பு பணியில் வெம்பக்கோட்டை போலீசார் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com