குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு


குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
x

கே.வி.குப்பம் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வுசெய்தார்.

வேலூர்

கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள 72 ரேஷன் கடைகளில் 15 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. வேப்பங்கநேரி, கே.வி.குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கும்பணியை மாவட்ட வழங்கல் அலுவலர் ப.சுமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சிலருக்கு பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கினார்.

அப்போது குடும்ப அட்டை தாரர்களிடம், பரிசு தொகுப்புகள் சரியாக உள்ளனவா? என்று கேட்டு அறிந்தார்.


Next Story