அஞ்சல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

வேலூரில் அஞ்சல் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அஞ்சல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
Published on

வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் தபால் துறையில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அஞ்சல் துறையின் விரைவு அஞ்சல், மின் பணவிடை, பதிவு அஞ்சல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகளையும் விளம்பரப்படுத்த வேண்டும். நாட்டில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 நாட்களுக்குள் அனைத்து அஞ்சல்களும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com