திருமயம், அறந்தாங்கி பகுதிகளில் இன்று மின்தடை


திருமயம், அறந்தாங்கி பகுதிகளில் இன்று மின்தடை
x

திருமயம், அறந்தாங்கி பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

திருமயம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர் சவேரியார் புரம் குளத்துப்பட்டி, பட்டணம் மலைகுடிபட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, ஆதனூர், வாரியப்பட்டி, கொள்ள காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன் பட்டி, அரசம்பட்டி, லட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் நிறுவனம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கி நகரம் கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அறந்தாங்கி நகர் மற்றும் கிராம பகுதிகளான கலப்பக்காடு, அக்ரஹாரவீதி, சந்தைப்பேட்டை ரோடு, ரெயில்வேபீடர் ரோடு, பேராவூரணி சாலை, பஸ் நிலையம், காந்தி பூங்காசாலை, டேவி தார்சாலை, எழில் நகர் பகுதி, கூத்தாடி வயல், பொற்குடையார் கோவில் ரோடு, மாநாட்டு திடல், திருவள்ளுவர் தெரு, வீரமாகாளி அம்மன் கோவில் தெரு, வளையல்காரதெரு, வடக்கு வீதி, புதுக்கோட்டை ரோடு, காரைக்குடி சாலை, கணபதி நகர், பைப் லைன் ரோடு, பெருமாள்பட்டி, நகராட்சி அலுவலகம், மணிவிளான் தெரு, குட்டை குளம் பகுதி, பள்ளிவாசல் பகுதி, அக்னி பஜார், புதுவயல் ரோடு, ஆலங்குடி ரோடு, இடையார், கம்மங்காடு, புதுவாகோட்டை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் கே.தனபால் தெரிவித்தார்.

1 More update

Next Story