சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயாராகும் போலீசாருக்கு மாதிரி தேர்வு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயாராகும் போலீசாருக்கு மாதிரி தேர்வு நடந்தது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நிலைய அதிகாரி உள்பட 750 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டும் அல்லாது போலீசாரும் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது.
இந்தநிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்டரங்கில் நேற்று போலீசாருக்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான மாதிரி தேர்வு நடந்தது. இதற்காக விண்ணப்பித்த 23 போலீசார் பங்கேற்று எழுதினர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எவ்வாறு நடக்குேமா? அதேபோல் இந்த தேர்வு நடந்தது. தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தேர்வு அறையை கண்காணித்தார். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் கோவை ஐ.ஜி. அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.