மல்லிகை, பிச்சிப்பூ விலை குறைந்தது


மல்லிகை, பிச்சிப்பூ விலை குறைந்தது
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 8 July 2023 6:45 PM GMT)

ராமநாதபுரத்தில் மல்லிகை, பிச்சிப்பூ விலை குறைந்தது. விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மல்லிகை, பிச்சிப்பூ விலை குறைந்தது. விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

பூக்கள் விலை குறைவு

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தற்போது திருவிழா ஏதும் இல்லாததாலும் முகூர்த்த நாளும் குறைந்து விட்டதாலும் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட அனைத்து வகை பூக்களின் விலையும் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியிலும் ஏராளமான பூ வியாபாரிகள் சிறு கடைகள் அமைத்து பூக்களை விற்று வருகின்றனர் அதிலும் மல்லிகை பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட அனைத்து வகை பூக்களின் விலையும் குறைந்துவிட்டன. பூக்களின் விலை குறைந்துள்ள நிலையிலும் விற்பனையும் குறைந்து விட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

வியாபாரம் பாதிப்பு

இது குறித்து பூ வியாபாரி முருகன் கூறும் போது:-

மதுரை,நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் இருந்து தான் ராமநாதபுரத்திற்கு பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.400-க் கும், முல்லைப் பூ 1 கிலோ ரூ.300-க்கும், ஜாதி பிச்சி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதே வகை பூக்கள் கடந்த வாரம் பக்ரீத் பண்டிகையின் போது மல்லிகை பூ ரூ.800-க்கும், முல்லைப் பூ ரூ.800-க்கும் ஜாதிப்பிச்சி ரூ.700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கோவில் திருவிழாக்கள், விசேஷங்கள் எதுவும் இல்லாததால் அனைத்து வகை பூக்களின் விலையும் ரூ.300 முதல் ரூ.400 வரை குறைந்துவிட்டன.

ஐப்பசி மற்றும் சித்திரை மாதங்களில் தான் அனைத்து வகை பூக்களும் பல மடங்கு விலை உயர்வாக இருந்தது. விலை அதிகமாக இருக்கும் போது கூட பூக்கள் வியாபாரம் நன்றாக இருந்தது. தற்போது அனைத்து வகை பூக்களின் விலை குறைந்துள்ள நிலையில் வியாபாரம் மிகவும் மந்தமாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story