ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் ஆபாச சேட்டிங் செய்த பலே பாதிரியார்...!


ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் ஆபாச சேட்டிங் செய்த பலே பாதிரியார்...!
x

இந்த வழக்கு தொடர்பாக பாதிரியார் கூறிய தகவல்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோ (29). கடந்த சில நாட்களுக்கு முன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம்பெண்களுடன் நெருக்கம், வீடியோ காலில் நிர்வாணமாக பேசுதல், ஆபாசமாக சேட்டிங் என குமரியை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் (வயது 29) லீலைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர் தலைமறைவானார்.

பின்னர் கடந்த 20-ந் தேதி அன்று நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பாதிரியாரின் செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு ஆபாச வீடியோக்கள் குறித்து பாதிரியாரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அவருடைய வாக்குமூலத்தை பெற்ற போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாதிரியார் மீது மேலும் 4 பெண்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதனிடையே ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய் மகள் மருமகள் என 3 பேரிடம் பாதிரியார் ஆபாச சேட்டிங்கில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக பாதிரியார் கூறிய தகவல்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிரியாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தங்களிடம் விசாரணை நடத்தி விடுவார்களோ என்ற பாதிரியாருடன் தொடர்பில் இருந்த பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

1 More update

Next Story