மழை வெள்ள பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு


மழை வெள்ள பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
x

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்பி வைக்க பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story