தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

ஆலங்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது/

புதுக்கோட்டை

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கிக்கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்யேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்தமுகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைநாடும் இளைஞர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்யுமாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story