தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
x

அரசு கலைக்கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி வருகிற 28-ந்தேதி காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுவோர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி, அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story