தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது

விருதுநகர்

தமிழக அரசின் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாமானது மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10-ம்வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலும், ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலந்து கொள்ளலாம். இது முற்றிலும் ஒரு இலவச சேவை ஆகும். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இணையதளத்தை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. எனவே விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

1 More update

Next Story