அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா


அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
x

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 2021-22-ம் கல்வி ஆண்டில் 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சி.வேல்முருகன் தலைமை தாங்கினார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சி.ரவிவர்மன் முன்னிலை வகித்தார். பிரிதிவிராஜ் நினைவு கல்வி அறக்கட்டளை நிறுவனர் லட்சுமிரவிவர்மன் கலந்துகொண்டு 12-ம் வகுப்பு மாணவர்கள் அகிலன், விஷால், ஸ்ரீகாந்த், அன்புகாவியன் ஆகியோருக்கும், 10-ம் வகுப்பு மாணவர்கள் யுவன்சங்கர், மணியரசன், யோகேஷ் ஆகியோருக்கும் முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000 வழங்கினார். ஆசிரியர் ராஜேந்திரன் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுக்கோப்பைகள் வழங்கினார். முன்னதாக ஆசிரியர் முருகேசன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story