பொதுமக்கள் சாலைமறியல்


பொதுமக்கள் சாலைமறியல்
x

பயணிகள் நிழற்குடை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர் அருகே மகாராஜபுரம் கிராமத்தில் கல்லணை பூம்புகார் சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த 30 ஆண்டுக்கு மோக இருந்த இந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்க பணிகளால் இடிக்கப்பட்டது. இதனால் நிழற்குடை இல்லாமல் வெயிலிலும், மழையிலும் பொதுமக்கள் நின்று பஸ்சில் பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கல்லணை பூம்புகார் சாலையை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற்குள் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story