பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நாளை (சனிக்கிழமை) பொதுவினியோக திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு அல்லது நகல் அட்டை கேட்டு பொதுமக்கள் மனு கொடுக்கலாம். அதேபோல் செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம், ரேஷன்கடைகளின் செயல்பாடுகள், ரேஷன்பொருட்களின் தரம், சேவை குறைபாடுகள் தொடர்பாகவும் புகார் மனு கொடுக்கலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story