திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு
Published on

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் வேலைவாய்ப்பு, பசுமைவீடு, அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டா என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 301 கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் கலெக்டர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகளை வழங்கினார். அதை தொடர்ந்த கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வித்யா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக கண்காணிப்பாளர் கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com