புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா
புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா நடந்தது.
சாயர்புரம்:
புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் 13-வது ஆண்டு விழா புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் பீட்டர் தலைமை தாங்கினார். பொருளாளர் ராபின்சன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசுகையில், புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் வெற்றிவேல் ராஜன். மத்திய மாவட்ட கூடுதல் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ராஜம், தூத்துக்குடி மார்க்கெட் ஐக்கிய சங்க தலைவர் அன்புராஜ், தூத்துக்குடி 3-வது மைல் வியாபாரி சங்கத் தலைவர் ஜெயபாலன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் புதுக்கோட்டை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் கணேஷ் பாண்டியன், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி, துணைத்தலைவர் முப்பிலியான் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். சங்க துணைத் தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.