புறையூர் கரும்புலி சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்
புறையூர் கரும்புலி சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே உள்ள புறையூர் பூரணக்கலா தேவி புஷ்ப கலாதேவி சமேத கரும்புலி சாஸ்தா கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி அணுக்கை கோ பூஜை கஜ பூஜை வாஸ்து சாந்தி பிரவேச பலி அங்குற பணம் ரஷ்ய பந்தனம் ஆகியவையும் புதன்கிழமை திரவியஷ்தி, பூரணாஷ்தி, தீபஆராதனை நடைபெற்றது. நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து சப்த கன்னியர் பூஜை, சுமங்கலி பூஜை நடைபெற்றது. காலை 11 மணிக்கு கோவில் விமானம், கரும்புள்ளி சாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story