புரவடையார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
இமாபுரம் கிராமத்தில் புரவடையார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு தாலுகா இமாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட புரவடையார் அம்மன் மற்றும் செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
புரவடையார் அம்மன் கோவில் முன்பு பந்தல் அமைத்து சிவாச்சாரியார்கள் மூலம் கணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, தம்பதிகள் பூஜை மற்றும் மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் 108 கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை ஊர்வலமாக சென்று 3 கோவில்களின் கோபுரத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் முன்னாள் எம்.பி. துரை, முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.எஸ்.அன்பழகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், பெரியகொழப்பலூர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கே.கோபால், வடமலை, துரை மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 3 மணி அளவில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.
இரவு கூழ்வார்க்கும் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு, காப்பு கட்டப்பட்டது. வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாரியம்மன், கங்கையம்மன், புரவடையார் அம்மனுக்கு பூகரகம் எடுத்தல், கூழ்வார்க்கும் திருவிழாவும், இரவு நாடகம், அம்மன் வீதி உலா, வாண வேடிக்கை நடக்கிறது.