புழல் சிறை கைதி திடீர் சாவு


புழல் சிறை கைதி திடீர் சாவு
x

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

திருவள்ளூர்

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 50). நில அபகரிப்பு வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சிறை போலீசார், சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கைதி ராஜேஷ் நேற்று உயிரிழந்துவிட்டார். இதுபற்றி புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

புழல் சிறையில் கடந்த 18-ந் தேதி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது கைதி ராஜேஷ், தனக்கு நெஞ்சு வலிப்பதாக சூப்பிரண்டு கிருஷ்ணராஜிடம் கூறியதாகவும், ஆனால் அவர் ராஜேசை ஆஸ்பத்திரியில் சேர்க்காமல் இருந்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் 2-வது முறையாக ஏற்பட்ட நெஞ்சுவலியால் கைதி ராஜேஷ் உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story