'கிராமத்து சமையல் சேனல்' யூடியூப் குழுவினரை சந்தித்த ராகுல் காந்தி
கடந்த ஆண்டு இதே குழுவோடு சேர்ந்து காளான் பிரியாணி சமைப்பதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.
இந்த நிலையில் இன்று பாரத் ஜோடோ நடைபயணத்தில் ராகுல் காந்தி தமிழகத்தின் மிகவும் பிரபலமான "கிராமத்து சமையல் சேனல்" (விலேஜ் குக்கிங் சேனல்) யூடியூப் குழுவினரை சந்தித்தார். கன்னியாகுமரியில் நடைபெற்ற நடைப்பயணத்தின் போது "கிராமத்து சமையல் சேனல்" குழுவினர்களோடு ராகுல் காந்தி பேசினார். இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமையல் சேனல் குழுவோடு சிறிது தூரம் பேசிய வாரே ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது கிராமத்து சமையல் சேனல் குழுவினர்களோடு சேர்ந்து காளான் பிரியாணி சமைப்பதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதனால் அவர்களுக்கு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.