அரியானாவில் விவசாயிகளுடன் வயலில் இறங்கி நாற்று நட்ட ராகுல் காந்தி!

ராகுல் காந்தி இன்று டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுதார். அதன்பிறகு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
Image Courtesy : PTI (file photo)
Image Courtesy : PTI (file photo)
Published on

டெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியை பலப்படுத்த பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி, நேரில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் இவர் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இவர் பாரத் ஜேடே என்ற யாத்திரை மேற்கொண்டார். இதில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீரி வரை நடைப்பயணம் செய்தார். சமீபத்தில் டெல்லி கரோல் பாகாவில் இருசக்கர வாகனம் பழுது பார்ப்பவர்களை சந்தித்து உரையாடினார்.

ராகுல் காந்தி தெடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒருபகுதியாக இன்று டெல்லியில் இருந்து இமாச்சல் பிரதேசத்தின் சிம்லாவுக்கு காரில் சென்று கெண்டிருந்தார்.

அவர் சென்ற சாலையோரத்தில் விவசாயிகள் வயலில் நாற்று நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுருந்தனர். இதை பார்த்த ராகுல் காந்தி உடனடியாக காரை நிறுத்த கூறினார். காரில் இருந்து கீழே இறங்கிய அவர், வயலில் இறங்கி நாற்று நடவு செய்தார். அதன்பிறகு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மேலும் டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுதார். இந்த புகைப்படங்கள் தற்பேது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com