தண்டவாள இணைப்பு பணி: மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்


தண்டவாள இணைப்பு பணி: மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
x

தண்டவாள இணைப்பு பணி காரணமாக மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை ரெயில் நிலையத்தில் அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில், ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 27-ந் தேதி மதுரை புறப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16343) திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16344) வருகிற 28-ந் தேதி மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story