திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலி


திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலி
x

திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார்.

சென்னை

திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 42). இவர், பொன்னேரி ெரயில் நிலையத்தில் தண்டவாளத்தை சரி பார்க்கும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற வேணுகோபால் அதன்பிறகு வீடு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் திருவொற்றியூர் ெரயில்வே யார்டு அருகே வேணுகோபால் ெரயில் மோதி இறந்து கிடந்தார். கொருக்குப்பேட்டை ெரயில்வே போலீசார் வேணுகோபால் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சட்டை பையில் இருந்த அடையாள அட்டை மூலம் அவரது வீட்டை அடையாளம் கண்டு குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி கொருக்குப்பேட்டை ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story