மழை வெள்ள பாதிப்பு: உடனடியாக நிதி வழங்க பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மழை வெள்ள பாதிப்பு: உடனடியாக நிதி வழங்க பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 Jan 2024 1:01 PM IST (Updated: 2 Jan 2024 1:05 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் கோரிக்கை என்பது அரசியல் முழக்கம் அல்ல; மக்களுக்கான முழக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி,

ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலம் தமிழ்நாடு தான். திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும்.சென்னை-பினாங், சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசின் பங்குப் பகிர்வு நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளை செய்துதரும் முக்கிய கடமை மாநில அரசுக்குதான் உள்ளது.

சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கை என்பது அரசியல் முழக்கம் அல்ல; மக்களுக்கான முழக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story