தமிழகத்தில் வரும் 12-ம் தேதிவரை மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் விடுத்துள்ள செய்தி அறிக்கையில், "மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12-ம் தேதிவரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த இரு நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யும். மன்னார்குடா, கன்னியாகுமரி கடல்பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசும். இதனால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story