கூடுவாஞ்சேரி துணைமின் நிலையத்தை சூழ்ந்த மழைநீர் - மின் விநியோகம் வழங்குவதில் சிக்கல்


கூடுவாஞ்சேரி துணைமின் நிலையத்தை சூழ்ந்த மழைநீர் - மின் விநியோகம் வழங்குவதில் சிக்கல்
x

துணைமின் நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கூடுவாஞ்சேரி ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் அந்த பகுதி முழுவதும் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக கூடுவாஞ்சேரி துணைமின் நிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் மின்சாரம் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துணைமின் நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நேற்று மதியம் முதல் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story