பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: சீமான் வாழ்த்து...!
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வரும் சூழலியல் நாயகர், சமூகநீதி காவலர், தமிழ் குடிதாங்கி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எங்கள் ஐயா மருத்துவர் ச.ராமதாசு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் உடல் நலத்துடனும், உள்ள நிறைவுடனும் நலமோடு வாழ்ந்து தமிழ்சமூகத்தின் உரிமைகள் வென்றிட பெருந்துணை புரிந்திட விழைகிறேன்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story